நேந்திர பழ ஜாமுன் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1/2 டம்ளர்
சர்க்கரை – 500 கிராம்
குங்குமப்பூ – ஒரு கிராம்
ஏலக்காய் – 2 சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நேந்திரம் பழம் – 2
நெய் பொரிப்பதற்கு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 500 கிராம் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் கொதித்ததும் நூல் பதம் வந்ததும் இறக்கி அதில் குங்குமபூ ஒரு கிராம், ஏலக்காய்த்தூள் 2 சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
குங்குமபூ இல்லை எனில் பரவாயில்லை. ஜீராவில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பில் இருந்து ஜீராவை இறக்கி விட வேண்டும்.
இரண்டு நேந்திர பழத்தின் தோலை உரித்துவிட்டு அதனை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு நெய் சேர்த்து மிதமாக சூடாக்க வேண்டும்.
நெய் நன்றாக சூடானதும் அதில் நறுக்கிய நேந்திரப்பழத்தை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதற்கு கருப்பாக இருக்கும் பழத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். இத்தகைய பழம் மட்டுமே நன்றாக பழுத்திருக்கும்.
பொரித்த நேந்திரம் பழத்தை ஜீராவில் சேர்த்து கிளறிவிட்டு அப்படியே மூன்று மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
மூன்று மணி நேரம் கழித்து பார்த்தால் நேந்திரம் பழம் நன்றாக ஜீராவில் ஊறி இருக்கும் பின் இதனை சாப்பிடலாம்.
இனிவரும் நல்ல நாட்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த நேந்திர பழ ஜாமுன் செய்து குடுத்து அசத்துங்க..
