பித்தளைப்பட்டி முத்தால அம்மன் கோவில் திருவிழா..!
சின்னாளம் பட்டியில் உள்ள பித்தளைப்பட்டி முத்தால அம்மன் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழா தொடக்கத்தில் செல்வ விநாயகர், அண்ணாமலையார், சப்த கன்னியர், கருப்பண்ண சாமி மற்றும் மதுரை வீரன் கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு கண் திறப்பு நடைபெற்றது. கண் திறப்பிற்கு பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் ஏராளமான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி மற்றும் அக்னீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலையில் புறப்பட்டார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி .