உடல் எடை கருத்தரிப்பை பாதிக்குமா..? கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்க்கு
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான ஒன்று இந்த சமயத்தில் உடல் மாற்றங்கள் பல ஏற்படும். அதிக உடல் எடை அல்லது குறைந்த உடல் எடை உள்ள கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதிக உடல் உடை மற்றும் குறைந்த உடல் எடையால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
அதிக உடல் எடை : கருத்தரிக்கும் நிலையில் இருக்கும் பெண்கள் அதிக எடையில் இருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதாவது ஒருபெண்ணின் பாடி மாக்ஸ் இன்டக்ஸ் (BMI ) கருத்தில் கொண்டு, அதிக எடையில் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தான் அதிகம் பாதிக்கும், அதாவது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, PCOS பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் கருமுட்டை அதிகம் பாதிக்கப்படுகிறது. ஹார்மோன் சமநிலையின்மையை பாதிப்பதால், கருத்தரிப்பதற்கே அதிக உடல் எடை காரணமாக அமைகிறது.
குறைந்த உடல் எடை : கருத்தரிப்பிற்கு முயற்சி செய்யும் பெண்களும், கர்ப்பிணி பெண்களும் குறைந்த உடல் எடையில் இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும். BMI 18.5 க்கும் குறைவாக இருக்கும் பெண்கள், குறைந்த உடல் எடையில் இருப்பதால். மாதவிடாய் ஆனது தள்ளிபோகும் மேலும் அதிக ரத்த போக்கை ஏற்படுத்தும். பெண்களின் மாதவிடாய் சீராக இல்லை என்றால், கருத்தரிப்பதற்கு நாளாகும்.
கர்ப்பமாக உள்ள பெண்கள், BMI 18.5 க்கும் குறைவாக இருந்தால் கருவில் உள்ள குழந்தைக்கு சரியான சத்துக்கள் கிடைக்காது, எனவே தான் ஒரு சில குழந்தைகள் பிறக்கும் பொழுதே உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் மருத்துவகுறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..