வேலை தேடி ஊர் விட்டு நாடு விட்டு செல்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..!! இதை படிக்க மறக்காதீங்க..!!
பிறந்த ஊரை விட்டு வேலை தேடி செல்லும் அனைவரும் கற்றுக்கொள்ளும் பாடங்கள் இத்தனை வருட வாழ்க்கையில், ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு,
ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என படித்ததும் இங்கே தான்.
நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுகி வைக்க வேண்டும்
எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது.
இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது.
வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டும்.
நீண்ட நேரம் உறங்க கூடாது..,
சத்தம் இல்லாமல் கதவை திறந்து மூட வேண்டும்,
தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கும் பழக்கம்,
பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் கண்ட இடம்,
எவ்வளவு கும்மிரட்டிலும் ரூமில் உறங்கு பவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் முடியாது.
நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க கற்றுக்கொள்வோம்.
பள்ளிக்கூடத்தில் 10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் வெளிநாட்டில் தான்..,
வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான்.
சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் கப்சாவும் போட கற்றுக்கொள்வான்.
உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை நாம் இங்கே கற்றுக்கொள்ள முடியும்..
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூடு, மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர் சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா..?
தனிமை வாழ்க்கை, அது ஒரு கதை. யாரும் சொல்லாத கதை. சொல்ல மறந்த கதை.
அதற்காக வெளிநாடு செல்வதோ அல்லது வெளிநாட்டில் வாழ்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை.., வெளிநாடு மட்டும் மல்ல சொந்த ஊரை வேலை தேடி பக்கத்து கிராமம் செல்பவர்களுக்கும் சரி.., தன் தனி தேவைகளை தான், தான் நிறைவேற்றிகொள்ள வேண்டும் என நினைத்து அதற்காக செயல்பட்டாலே கஷ்டபட வேண்டிய அவசியம் இல்லை..