அரண்மனையில் மறைந்திருக்கும் ரகசியங்கள் – குட்டிஸ்டோரி-40
தூங்கா நகரத்தில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரு ஆசை, அது என்னவென்றால் இந்த அரண்மனையின் தெற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு அறையின் ரகசியம் அதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பததாக அனைவரும் காத்துக்கொண்டுருந்தனர்.
யாரும் அந்த அறைக்குள் செல்ல மாட்டார்கள் ராஜா மட்டும் தான் செல்வார் அங்கு சென்றால் மறுநாள் விடிந்த பிறகு வெளியில் வருவாராம் ,அனைவரும் அதை தினமும் பார்த்துக்கொண்டு இருப்பார்களாம், ராஜாவிடம் அந்த அறையில் இருப்பது என்ன என்று கேட்பதற்கு அனைவருக்கும் பயம் அதனால் யாரும் கேட்க மாட்டார்களாம்,
அப்படி ராஜாவிடம் கேட்ட ஒருவனை ராஜா அந்த அறைக்குள் அனுப்பிவைத்தாராம் ஆனால் அவன் இன்று வரைக்கும் திரும்பி வரவில்லையாம் அந்த காரணத்தினால் யாரும் அவரிடம் கேட்பதில்லையாம்,
ஒருநாள் இரவு ராஜா அந்த அறைக்குள் சென்றார், வாயிற்காவலன் தானும் ராஜாவுடன் செல்லலாம் என்று அவரை பின்தொடர்ந்து சென்றான், அவனால் அந்த கதவு வரைக்கு மட்டுமே செல்லமுடிந்தது அந்த அறைக்குள் செல்வதறிக்குள் கதவின் பக்கங்கள் மூடிக்கொண்டது.
அன்று இரவு முழுவதும் தூங்காமல் எப்படியாவது அந்த அறையில் சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தாக வேண்டும் என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான், நாளைக்கு ராஜா காலையில் வெளிய வந்த பிறகு யாரும் அந்த அறையின் பக்கம் செல்லமாட்டார்கள் அப்பொழுது நான் சென்று அங்கு என்ன இருக்கிறது.
என்று பார்த்து விடலாம் என்று விடியலை நோக்கி காத்திருந்தான் அந்த வாயிற்காவலன், பொழுது விடிந்தது ராஜா அன்றைக்கு அந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை நாள் முழுவதும் காத்திருந்தான் இரவு பொழுதும் ஆனது,
ஆனால் ராஜா மட்டும் வெளிய வரவில்லை இவன் கதவை திறந்து உள்ளை நுழைந்தான் அங்கு எங்கு பார்த்தாலும் தங்கமும் வைரமும் ஜொலிக்க தேவதையே மிஞ்சும் அளவிற்கு பெண் ஒருத்தி இருக்க அவளின் அழகில் மயங்கி விழுந்தான் வாயிற்காவலன்,
அருகாமையில் அமர்ந்து அவனை கண்விழிக்க செய்தால் அந்த பெண், ராஜா ஏன் தினமும் இரவில் இங்கு வருகிறார் என்று கேட்டான்.
நான் அவருடைய மனைவி அவருக்கு ஒரு சாபம் என்னிடம் இருக்கும் உடைமைகளை எல்லாம் அவரால் பயன்படுத்தி கொள்ள முடியாது அதுவோ அவருக்கு மனவேதனையாக இருப்பதனால் என்னை இந்த அறையில் அடைத்து வைத்திருக்கிறர் நேற்று இரவு என்னை தொட்டதால் அவர் மறைந்து சென்று விட்டார்.
இதுதான் ஏன் வாழ்வின் ரகசியம் வாயிற்காவலரே என்று கூறினால் அந்த பெண் .இப்படி ஒரு ரகசியம் உங்கள் வாழ்க்கையில் நடந்தால் என்ன செய்விர்கள்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..