பிரசவ கால தழும்புகளுக்கு தீர்வு..!
சருமத்தில் உண்டாகும் தழும்புகளை சரிசெய்வதே சவாலான ஒரு செயலாகும். இதை சரிசெய்வது என்பது ஒரு கடினமான விஷயங்களே ஆகும். ஆயிரத்தில் செலவழித்தாலும் தழும்புகள் மறைவது என்பது சிலருக்கு கடினமானதே ஆகும்.
குறிப்பாக பிரசவத்தின்போது பெண்களுக்கு உண்டாகும் தழும்புகள் மறைவது பெண்களுக்கு சவாலானது.
இளம் வயதிலே எடை அதிகமாக இருப்பவர்களுக்கு தொடை, கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் இந்த தழும்புகள் உண்டாகிறது.
இதனை தடுக்கும் வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
கற்றாழை:
கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை குளித்த பிறகு சருமத்தில் இருக்கும் தழும்புகளின் மீது தடவி வரலாம்.
பாதாம் ஆயில்:
பாதாம் எண்ணெயில் சிறிது சர்க்கரை கலந்து தழும்புகளின் மீது தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து பின் அலசி வர வேண்டும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.
தேங்காய் எண்ணெய்:
சுத்தமான தேங்காய் எண்ணெய் சருமத்தில் உண்டாகும் பலவித பாதிப்புகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. இதனை தழும்புகளின் மீது தடவி மசாஜ் செய்து நீரினால் கழுவி வரலாம்.
விளக்கெண்ணெய்:
பெண்களுக்கு பிரசவ தழும்புகள், எடை காரணமான தழும்புகளை மறைக்கும் சக்தி இந்த விளக்கெண்ணெய்க்கு உண்டு. எனவே தழும்புகள் இருக்கும் பகுதிகளில் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வர நாளடைவில் தழும்புகள் மறையும்.