தமிழக மக்களே உஷார் இன்னும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் இன்னும் 7 நாட்களுக்கு லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்னும் 7 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 25ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும்.., சென்னையின் ஒருசில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அதிக பட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்ஸியஸ் முதல் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி வரை வெப்பம் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..