எடப்பாடிக்கு எதிராக திரும்பிய மதுரை மக்கள்..!! அப்படி என்னப்பா பண்ணாரு EPS..!!
மதுரையில் தேவர் இன கூட்டமைப்பினர் அதிமுக மாநாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தேவர் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டத்தால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். மதுரை முனிசாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆயிரம் கணக்கானோர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
தென்மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என்பதற்காகவே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக பதவியேற்ற பின் தன்னுடைய ,முழு பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக மதுரை விமான நிலையம் அருகே நாளை மிகப்பெரிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிமுக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்..,
அதற்கான கரணம் குறித்து கேட்ட போது, எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த போது 10.5 சதவீதத்தை வேறொரு சமூகத்திற்கு வழங்கி, அதை இவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி விட்டதாகவும் மேலும் தங்களுடைய சமுதாயத்தை முழுமையாக எந்தவித அரசு சலுகை கிடைக்காமல் ஏமாற்றிகொண்டு வருவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போராட்டம் மட்டுமின்றி எடப்பாடி மதுரை வரக்கூடாது என்பதற்காக.., போஸ்டர் மற்றும் பேனர்கள் வைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..