குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இருக்கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் ஒட்டு போடாமல் இருந்தால் ரூ.51 அபராதம் என்று ராஜ் சமாதியாலா கிராமத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ராஜ்கோட் பகுதியில் உள்ள ராஜ் சமாதியாலா என்ற கிராமத்தில் 1983ம் ஆண்டிலிருந்து அந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த கிராமத்தின் தலைவர் குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தால் ரூ.51 அபராதமாக செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ளதால் தேசிய கட்சிகள் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொன்டு வருகின்றனர்.