தோஷம் நீக்கும் மயில் இறகு.!! பூஜை அறையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்..?
தோகை விரித்தாடும் மயிலை நாம் எந்த அளவிற்கு ரசிக்கிறோமோ அதே அளவிற்கு மயில் இறகை நாம் வீட்டில் வைத்து வழிபடவும் செய்வோம்..
வீட்டில் ஏன் மயில் இறகை வைக்க வேண்டும்..? அப்படி வைப்பதால் நமக்கு என்ன பலன் என்று இந்த ஆன்மீக குறிப்பில் படிக்கலாம்.
மயில் இறகை வைப்பதால் கிடைக்கும் பலன் :
வீட்டில் பூஜை அறையில் மயில் இறகை வைப்பதனால் தீய சக்திகள் நுழையாது என்பது ஐதீக உண்மை..,
மற்றும் ஒரு சிலரது வீட்டில் குழந்தைகளுக்கு தோஷம் தொற்றும் என சொல்லுவார்கள்.., அப்படி நாம் மயில் இறகை வைப்பதனால் குழந்தைகளுக்கு தோஷம் நீங்கி உடல் நலம் பெறுவார்கள்..
வீட்டில் அனைவரின் மனதிலும் நேர்மறை எண்ணங்கள் தோன்றும், சண்டைகள் இல்லாமல் எப்பொழுதும் அமைதியான மகிழ்ச்சியான குடும்பமாக அமையும்..
குழந்தைகளுக்கு படிப்பு திறன் அதிகரிக்கும்,
கணவன் – மனைவிக்கு இடையே ஆன உறவு அதிகரிக்கும்,
பணப் பெட்டியில் மயில் இறகை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்..
பூஜை அறையில் மயில் இறகை வடக்கு முகம் பார்த்தவாறு வைக்க வேண்டும்.. அப்படி வைத்தால் பண வரவு அதிகரிப்பதோடு கடன் சுமை குறையும்,
கிழக்கு திசையில் வைத்தால் வீட்டின் பொருளாதாரம் உயரும்.
பூஜை அறையில் முருகன் திருவுறுவப் படத்திற்கு முன்னே வைத்தால் செல்வம் செழிக்கும்,
ஒரு போதும் மயில் இறகை வீட்டின் மேற்கு திசையில் வைத்து விட வேண்டாம்.., அப்படி வைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்..