வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளே உஷார்..!! ரயிலில் வழங்கப்பட்ட உணவில்..?
இந்தியாவில் அதிக மக்கள் பயணம் செய்யும் போக்குவரத்து “ரயில்” அதிலும் தற்போது இந்தியா முழுவதும் சில முக்கிய நகரங்களில் “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” ரயில் களுக்கான சேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு பல விதமான எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் தற்போது கிளம்பியுள்ளது.
அதற்கு காரணம் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட “உணவு“.., ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து புகார் அளித்தும் அதுகுறித்து எந்த விதமான நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை என பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் இருந்து வந்தே பாரத் ரயிலில் நேற்று முன்தினம் சென்ற (மசிந்திர பவார் ) பயணி ஒருவர்.., ரயில் கேண்டினில் சாப்பாடு வாங்கியுள்ளார்.., உணவு பொட்டலத்தை பிரித்து பார்த்ததும் அதில் நகம் இருந்துள்ளது. அது குறித்து காண்ட்ராகட்டரிடம் கேட்ட பொழுது சரியான பதிலை சொல்லாமலே அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
பின் உடன் பயணித்த பயணிகளும், மசிந்திர பவாரும் அந்த உணவை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்டிசி -யில்) தரம் குறைவாக உணவை தயார் செய்ததற்காக, கேட்டரிங் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருப்பதற்காக சில விதிகளை விதித்துள்ளது. ஐஆர்டிசி அதிகாரிகளில் ஒருவர் இனி தினமும் பயணிப்பார். மேலும் இது குறித்து அணைத்த ரயில்களில் உள்ள கேன்டீனில் மேற் பார்வையிடப் போகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால்.., உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உணவு குறித்து சோதனைகள் மேற்கொண்டு.., இனி மக்களுக்கு சரியான உணவை வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post