சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக சென்ற சந்திராயன் -3..! மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்..
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன் -3 விண்கலத்தை இன்று செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து எம்.எல்.வி.எம் 3 மற்றும் எம் 4, (ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3) ராக்கெட்டின் மூலம் இன்று மதியம் 2:35 மணிக்கு சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்பட்டது.
ஶ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. எல்.வி.எம் 3, எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. இன்று விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும் 3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும்.
இந்த ராக்கெட் திட்டமிட்ட படி பயணித்து சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்று பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன் 3 ராக்கெட்டில் இருந்து பிரிந்ததை கண்ட விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத். சந்திராயன் 3 விண்கலத்தின் துல்லியமான சுற்று பாதையில் மிக துல்லியமாக சென்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
Discussion about this post