தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களக்குக்கு கனமழை எச்சரிக்கை..!!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 21ம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த நாட்களில் எந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15-07-23 மற்றும் 16-07-23 :
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான லேசான மழையும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17-07-23 முதல் 21-07-23 வரை :
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
வெப்பநிலை நிலவரம் :
15-07-23 முதல் 16-07-23 :
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் இருக்க கூடும். ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை :
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவிற்கு மேக மூட்டத்துடன் இருக்கும்., சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற இடங்களில் அதிக கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக பட்ச வெப்ப நிலையாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸும், மற்றும் குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என அறிவித்துள்ளது.
மீனவர்கள் :
மீனவர்களுக்கான முன் எச்சரிக்கையாக வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 65கிமீ வேகத்தில் வீசும் என்பதால்.., மீனவர்கள் இன்று முதல் இன்னும் ஐந்து நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும்.., கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது என்றும்.., வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post