சுமை தூக்கும் பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போரட்டம்..!! 300 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்
சுமை தூக்கும் பணியாளர்களின் 3-வது நாள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போரட்டத்தின் காரணமாக மஞ்சள், ஜவுளி உட்பட 300 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது
ஈரோட்டில் , ஜவுளி மஞ்சள் ,எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான சரக்குகளை லாரிகளில் ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 4500 சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3 -வது நாள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படயிருந்த 300 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அனுப்ப முடியாமல் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளது.
ஈரோட்டில் தந்தை பெரியார் சுமை தூக்குவோர் மத்திய சங்கம், தமிழக தொழிலாளர் சுமைதூக்குவோர் சங்கம், ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்கம், ஈரோடு மாவட்ட சுமை பணியாளர் சங்கம், பாட்டாளி சுமை தூக்குவோர் மத்திய சங்கம் என 5 சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கங்களில் 4500க்கும் மேற்பட்டவர்கள் . சுமை தூக்கும் தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு டிரான்ஸ்போர்ட் மற்றும் ரெகுலர் லாரி நிறுவனங்களின் மீது நடவடிக்கை கோரி ஈரோடு பார்க்ரோட்டில் ஈரோட்டில் அனைத்து சுமை பணி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டுஇருக்கிறார்கள்.
6 ஆண்டுகளில், பலமுறை போராடியும். அரசு அதிகாரிகளிடம் புகார், தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. எனவே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேசி, முடிந்த கூலி உயர்வு கொடுப்பதை ஈரோடு சுமை தூக்கும் தொழிலாளர்களின் மொத்த தொழிலாளர்கள் 4800 பேர் உள்ளார்கள்.
இப்போது 1000 சுமை தூக்கும் தொழிலாளர்கள் (ஆயிரத்துக்கு) மேற்பட்டோர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கால வரையற்ற மற்றும் தர்ணா போராட்ட சுமைப்பணி தொழிலாளர்களுக்கு டிரான்ஸ்போர்ட் மற்றும் ரெகுலர் லாரி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்.
ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகில், தலைமை பெரியார் நகர் இரா.மனோகரன், தலைவர், TPTS வாழ்த்துரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, பொதுச்செயலாளர் மத்திய சரங்கம், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்கள், ,ஈரோடு, EPTS பொதுச் செயலாளர் பொ.வை. ஆறுமுகம் பொதுச் செயலாளர் EPTS தலைவர் மத்திய சங்கம்” , ரவிச்சந்திரன் மாவட்ட கவுன்சில் துணை சேவா தலைவர், இவர்கள் ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் லாரி புக்கிங் அலுவலகங்களில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த தொழிலாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக ட்ரான்ஸ்போர்ட் மற்றும் லாரி நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் தங்களது கூலி உயர்விற்காக பலமுறை போராடியும் , அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.
எனவே அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்களின் சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கினர்.
தொடர்ந்து 3 வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ஜவுளி ,மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட 300 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன.
இந்த போராட்டத்தில் போது பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.