“ஆளுநர் ரவி தேநீர் விருந்து” பங்கேற்கும் கட்சிகள்..? புறக்கணிக்கும் கட்சிகள்..?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார்.
ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று காலை கொடியேற்றம் முடிந்த பின் அன்று மாலை ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என் ரவி ஆகஸ்ட் 15ம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். அதற்காக தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு விருந்தில் பங்கேற்க பதற்கான அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் கலந்து கொள்ள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம் தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆளும் திமுக கட்சி தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.