கல்லூரிக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர்.. இறுதியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மகன் அக்மல். 20 வயதாகும் இவர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அக்மல் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அவரை கல்லூரிக்கு ஒழுங்காக செல்லும்படி கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் விவசாய நிலங்களுக்கு அடிக்கடி பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி உள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கபட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பெற்றோர் கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”