விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அன்னியூர் சிவா..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விக்கிரவாண்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானதை தொடர்ந்து, அம்மாவட்டத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,000 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார். அதன் மூலம் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணியை விட 67,757 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா இன்று பொறுப்பேற்றுள்ளார். தலைமை செயலகத்தில் அன்னியூர் சிவாவுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திருமாவளவன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..