கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ், பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் உள்ள பிப்ராசி கிராமத்தைச் சேர்ந்தவர். புவியியலில் எம்எஸ்சி பட்டதாரியான இவர், ஜனாதிபதியின் காவல்துறை பதக்கம் பெற்றவர். இவருக்கும் மனைவி பல்லவிக்கும் பல ஆண்டுகளாக குடும்ப பிரச்னை இருந்துள்ளது. தனது மனைவியை துப்பாக்கியை கொண்டு சுட்டுவிடுவதாக ஓம் பிரகாஷ் அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில், அவரின் மனைவி பல்லவி தனது கணவர் ஓம்பிரகாஷை பெங்ஙளுரு வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவரின் மனைவி பல்லவி மகள் ஆர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி கொலையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து கொல்லப்பட்ட டி.ஜி.பியின் மகன் கார்த்திக் கூறுகையில், ‘எனது தந்தை அவரின் சகோதரி பெயரில் சமீபத்தில் ஒரு வீடு வாங்கினார். இந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி எனது தாயார் வற்புறுத்தி வந்தார். ஆனால், எனது தந்தை மறுத்தார். இதன் காரணமாக , கடந்த ஒரு வார காலமாக எனது தாயார் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டி வந்தார். இதையடுத்து, எனது தந்தை அவரின் சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார். இரு நாட்களுக்கு முன் நான்தான் எனது தந்தையை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தேன். இப்போது, இப்படி நடந்து விட்டது’என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட முன்னாள் டி.ஜி.பி சாப்பிட்டு கொண்டு இருந்த போது, முகக்தில் மிளகாய் பொடியை பல்லவி வீசியுள்ளார். பின்னர், அவரை கத்தியார் குத்தி கொலை செய்துள்ளார். ஓம்பிரகாஷ் கீழே விழுந்து துடிதுடித்து இறப்பதை அருகில் சேரை போட்டு பார்த்து கொண்டிருந்துள்ளார் பல்லவி. மகள் ஆர்த்தி தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவரையும் மிரட்டி பல்லவி தடுத்துள்ளார். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் போராடி ஓம் பிரகாஷ் உயிரை இழந்துள்ளார்.