பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள சையத் ஆசிம் முனீர் என்பவர் இந்தியாவை சீண்டும் வகையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவை எதிர்த்து போரிட தயாராக இருப்பதாக ராணுவ தளபதி சையத் ஆசிம் முனீர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதால் பலர் அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் தற்போது புதிய ராணுவ தளபதி நியமிக்கப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தான் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவை கடுமையாக சீண்டும் வகையில் பேசியுள்ளார், அவர் பேசுகையில், இந்தியா பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவம் என்றும் தயாரா இருக்கும், பாகிஸ்தான் நாட்டை காக்கவும் எதிரிகளின் எதிர்த்து போராடவும் தயாராக உள்ளோம் என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எங்கள் மீதும் எங்கள் உடமைகள் மீதும் போர் திணிக்கப்பட்டால் அந்த போரை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த ஆவேச பேச்சுக்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாக்கிஸ்தான் ராணுவ தாபத்தியின் இந்த பேச்சிற்கு இந்தியா வெளியுறவு துறை எந்த ஒரு பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை.