ஜம்மு – காஷ்மீர் சர்வதேச எல்லை வழியே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது.
ஜம்மு ஆர்.எஸ். புரா பகுதிகளில் அரீனா சர்வதேச எல்லை வழியே பாகிஸ்தானியர் ஒருவர் இன்று காலை ஊடுருவ முயன்ற நிலையில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
ஒரே வாரத்தில் இது 3-வது முயற்சி இதுவாகும். கடந்த 25-ஆம் தேதி ஜம்மு சம்பா பகுதியில் சர்வதேச எல்லை வழியே ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்நபர் தன்னிடம் வைத்திருந்த 8 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருளை விட்டு விட்டு படுகாயங்களுடன் தப்பியோடினார்.
இவ்வாறு எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.