கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சொர்க்கபூமியாக இருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காவாஜா ஆஷிப் கூறியுள்ளார்.
பாகிஸதான் பாதுகப்புத்துறை அமைச்சர் காவாஜா ஆஷிப் ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டி அளித்தார். செய்தியாளர் யால்டா, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி, பண உதவிகள் செய்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறதே என்று கேட்டார். அதற்கு பதிலளித்த காவாஜா ஆஷிப், ஆமாம்… இந்த அவமானக்கரமான செயலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் போன்ற நாடுகளுக்காக கடந்த 30 வருடங்களாக செய்து வருகிறோம்.
லஸ்கர் இ தொய்பா இப்போது இல்லை. அது மறைந்து விட்டது. அதன் மறுவடிவம்தான் தி ரெஸிஸ்டன் ஃப்ரண்ட். தற்போதுள்ள சூழலில் எங்களை இந்தியா தாக்கினால், நாங்களும் அனைத்து பதிலடிக்கும் தயாராக இருக்கிறோம். அணுசக்தி கொண்ட இரு நாடுகள் போரில் ஈடுபட்டால் , அது உலக நாடுகளையும் பாதிக்கும். ஏதும் தவறாக முடிந்தால், அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மீடியாவிடத்தில் வெளிப்படையாக தீவிரவாதிகளுக்கு உதவி வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.