நடிகர் சூர்யா நடித்து கடைசியாக வெளி வந்த படம் கங்குவா படுதோல்வியடைந்தது. இதற்கு அடுத்து,கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் சூர்யா நடித்து வந்தார். இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டது.
சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸாகிறது. இதை முன்னிட்டு இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், “என் மகன் சூர்யாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?” எனப் பெருமையாக குறிப்பிட்டடார்.
சிவக்குமார் பேசிய இந்த விஷயம் குறித்து நடிகர் விஷாலிடம் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த விஷால், “முதல்முறையாக தனுஷ் தான் நடித்த பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். பின் நான் சத்யம், மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்திருந்தேன். இதையெல்லாம் மறந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
கங்குவா படம் படுதோல்வி கண்டதால் ரெட்ரோ படம் வெற்றி பெற் வேண்டுமென சூர்யா எதிர்பார்த்த காத்துள்ளார். இந்த படமும் அடி வாங்கினால் சூர்யாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.
ரெட்ரோ படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். படத்தை முழுமையாக பார்த்து முடித்துவிட்டு, நல்லா வந்துருக்கு என்று சூர்யா கூறி ரொம்ப சந்தோஷப்பட்டதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.