திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் சரவணன் 48 இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும் மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் முதல் மகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும், இரண்டாவது மகள் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். மூன்றாவது மகள் திருவெறும்பூர் ஐடியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சவுந்தரவள்ளி தனது மூன்றாவது மகளை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மகள்களை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று சரவணன் வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வந்தனர்.
இதில் சவுந்தரவள்ளி எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு பந்தல் காண்ட்ராக்ட்டில் வேலை பார்த்து வருவதும் அதில் மேலாளராக உள்ள லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சரவணன் வீட்டிற்கு வந்து சரவணனுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்படி குடிக்க வைத்தது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் போலீசாரிடம் சரணடைந்துள்ளான்அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அவனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.
Discussion about this post