விவசாயிகளிக்கு எதிராக குண்டர் சட்டத்திற்க்கு தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கும் நிலையில்,குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது
விவசாய நிலத்தை அபகரிப்பதோ, விவசாயிகளை வஞ்சிப்பதோ அரசின் நோக்கமல்ல என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைதான நிலையில், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்யாறு விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எந்தவித முன்வழக்குகளும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.விவசாயிகளை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள் என்றும், அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, அரசாங்கம் செய்யும் நல்ல செயல்களை தடுக்க சிலர் விவசாயிகளை போராட தூண்டி விடுவதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post