தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது….
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018-இல் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையை சோ்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆா்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.