ADVERTISEMENT
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை,அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்
சமூக நீதி மற்றும் பொருளாதார சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவம்.30ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டனர்.
அதில், மஹாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 நிதியுதவி வழங்கப்படும் என்றும், 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் எனவுன், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா நாளை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரங்கல், நால்கொண்டா, கத்வால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post