திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்…
திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்க்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 20ம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ள சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவஸ்தானத்தின் மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இதில்https://thirunallarutemple.org/sanipayarchi/darshan_register என்று தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
