சாரதா இன்டர்நேஷனல் பள்ளியின் 7ம் ஆண்டு தடகள இறுதி போட்டி…
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சாரதா இன்டர்நேஷனல் பள்ளியின் 7ம் ஆண்டு தடகள இறுதி போட்டி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி செயல்பட்டு வரும் சாரதா இன்டர்நேஷனல் பள்ளியின் 7ம் ஆண்டு மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை நடத்தி வருகிறது.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நான்கு அணிகளாக பங்கேற்று தனித்திறனை வெளிபடுத்தி இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராணுவ அதிகாரி சிவக்குமார், பள்ளி தாளாளர் பெருமாள்சாமி, நிர்வாக இயக்குனர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.