தனுர் மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை!!
மயிலாடுதுறையில் தனுர் மாதப்பிறப்பை முன்னிட்டு மாயூரநாதர் கோயில் வதான்யெஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனகர்த்தர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் ஆலயம், வதான்யெஸ்வரர் ஆலயத்தில் தனுர் மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தி தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
