உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான டிவிட்டரின் இந்திய செயல்பாடுகள் குறித்து டிவிட்டர் உயர் அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. டிவிட்டரின் இந்திய பிரிவின் மூத்த இயக்குநர் சமிரன் குப்தா மற்றும் இயக்குநர் ஷகுப்தா கம்ரான் ஆகியோருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஆக.26) டிவிட்டரின் முன்னாள் தலைவர் பீட்டர் ஜாட்கோவின் அறிக்கைகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கேள்வி எழுப்பியது.
டிவிட்டர் அதிகாரிகளிடம் அவர்களின் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகள் உள்ளூர் கொள்கைகள் மற்றும் ஒற்றை உலகளாவிய தனியுரிமைக் கொள்கையுடன் ஒத்திசைகின்றனவா? வெவ்வேறு நாடுகளின் தேசிய தனியுரிமைக் கொள்கைகளில் ஏற்படும் முரண்பாடுகளை டிவிட்டர் எவ்வாறு கையாள்கிறது என்று கேட்கப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு அதிகாரிகள் திருப்திகரமான பத்திகளை அளிக்கவில்லை. தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றிய கேள்விகளையும் அதிகாரிகள் தவிர்த்துவிட்டனர். இதனை தொடர்ந்து டிவிட்டர் உயர்மட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழு எம்.பி.க்களால் தண்டிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான அறிக்கையை நாடாளுமன்றக் குழு செய்து வருகிறது.