“ஆன்லைன் லிங்க் மோசடி..” 73 லட்சம் பணம் திருட்டு..!!
கரூரில் பொதுமக்களிடம் தொலைந்து போன 208 செல்போன்கள் மற்றும் இணைய வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இழந்த ரூ.73 லட்சம் ரூபாய் தொகையை உரிய நபர்களிடம் எஸ்.பி ஒப்படைத்தார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடுபோன மற்றும் தொலைந்து போன செல்போன்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 208 செல்போன்கள் மற்றும் இணைய வழி குற்றங்களில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இழந்த ரூ. 73 லட்சம் ரூபாயை உரிய நபர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா ஒப்படைத்தார்.
மேலும், செல்போன் தொலைத்தவர்கள் மற்றும் இணைய வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் இதுபோன்று ஏமாற வேண்டாம் என்று அறிவுரை கூறினார். சந்தேகத்திற்குரிய நபர்கள் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டாலோ அல்லது லிங்க் அனுப்பி அதனை பதிவு செய்யுங்கள் என்று கூறினாலோ உடனடியாக சைபர் கிரைம் காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் சைபர் கிரைம் நிலைய காவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..