“ஒழுக்கமே சுதந்திரம்” பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும்..? ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சங்கமம்..!!
திருப்பூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான சங்கமம் நிகழ்ச்சி…
ஜமாத் இஸ்லாமிக் ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய கால சூழ்நிலையில் மனித சமூகத்திற்கு மத்தியில் நிலவி வரும் ஒழுக்க சிதையில் குறித்தும் அதன் பாதிப்புகள் சமூகத்தில் எந்த அளவு பெரிய தீமைகளையும், அழிக்க முடியாத தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது. என்பதை குறித்தும் எதிர்வரும் சந்ததிகளுக்கு குறிப்பாக வளரும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் எந்த மாதிரியான ஒழுக்க முறைகளோடு அவர்கள் வளர வேண்டும்.
என்பதை வலியுறுத்தியும் பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்தும் புள்ளி விரிவான ஆதாரங்களுடன் விரிவான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி திருப்பூர் கிளை சார்பாக வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மசூதியில் ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி அகில இந்திய மகளிர் அணி துணைச் செயலாளர். ராபியா பஸரி தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கணினி மூலம் ஆசிரியர்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்னால் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்றைய சமுதாயம் இதுதான் வாழ்க்கை என்று சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஜமாத்தை இஸ்லாமி ஹிந்த் செப்டம்பர் மாதம் முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மகளிர் அணி பொறுப்பாளர் ஹம்ஸா, உறுப்பினர்கள் ஜரினா, ஷகிலா பானு உள்ளிட்ட நிர்வாகிகளும் திருப்பூர் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..