கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட இருக்கின்றனர். பின்னர் டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. தொடர்ந்து மீண்டும் வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் நடை அடைக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையைக் காண வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. அத்துடன் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.