ராஜராஜ சோழன் குறித்து கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், அது குறித்து நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மணி விழா நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் சினிமா ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுகிறது என தெரிவித்தார்.
அவரது கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கமலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது என்றும், வைணவம், சைவம் இருந்தது எனவும் தெரிவித்தார்.இந்த சர்ச்சை தொடரும் நிலையில் நடிகர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாமன்னன் ராஜராஜ சோழன் புகழ் பரப்புவோம். உலகறிய செய்வோம்.
மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புகழ் பரப்புவோம்! உலகறியச் செய்வோம்!#rajarajachozhan #tamilking #historical #indusvalleycivilization #evolution #technology #scientific #Development #economy #growth pic.twitter.com/JKwrXBkiRs
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) October 8, 2022
என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது அதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்ற சர்ச்சை நாட்டிற்கு தேவைதானா? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை வந்ததா என ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம். காலத்திற்கேற்ற ஆட்சி அமைப்பு, ஒருங்கிணைப்பு, வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. அப்போது, ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா என தெரிவித்துள்ளார். அவரவர் நம்பிக்கை கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்புவது வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார்.