ஒன் மோர் போட்டோ ப்ளீஸ்.. விக்ரம் லேண்டர் அனுப்பிய போட்டோ..!!
நிலவில் இருக்கும் சந்திரயான்- 3ன் லேண்டரை, சந்திரயான்- 2 ஆர்பிட்டர் பிடித்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் “சந்திரயான்-3 விண்கலம்” கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த “விக்ரம் லேண்டர்” ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த “பிரக்யான் ரோவர்” 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளது.
டிஎப்எஸ்ஏஆர் (DFSAR) கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமியில் பெறப்பட்டதாகவும் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22- ஆம் தேதி செயல்பட தொடங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த 6-ஆம் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் கருவி, சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..