மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டமானது, செப்டம்பா் 15-ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலமாக வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் மூன்று கட்டமாக முகாம்கள் நடைப்பெற்றது.
முகாம்களின் இறுதியில் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுது. பின்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிப்பார்த்து 1.50 கோடி பேர் தகுதியுடையவர்களாக அரசு அதிகாரிகள் திருத்தம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.