செட்டிநாடு சிக்கன் வறுவல் ரெசிபி..!
சிக்கன் ரெசிபி என்றாலே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஒரு உணவுப் பொருளாகும். அதிலும் நான் சொல்லும் இந்த பாரம்பரிய முறையில் சுவையை கூடுதலாக கொடுக்கும் செட்டிநாடு சிக்கன் வறுவல் தயார் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ சிக்கன்
- ஒரு டேபிள் ஸ்பூன் தயிர்
- இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- உப்பு
- கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லி
- ஒன்றை டீஸ்பூன் மிளகு
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- ஒரு துண்டு பட்டை
- மூன்று ஏலக்காய்
- மூன்று கிராம்பு
- ஆறு வரமிளகாய்
- எண்ணெய்
- இரண்டு பெரிய வெங்காயம்
- கருவேப்பிலை
- இரண்டு பச்சை மிளகாய்
- அரைத்து வைத்த மசாலா
- ஊற வைத்த சிக்கன்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை:
- முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
- ஒரு கிண்ணத்தில் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சிக்கன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்துக் அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து சீரகம், மல்லி, பட்டை, மிளகு, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து பின் ஆறவைக்க வேண்டும்.
- நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின் அரைத்த மசாலாவை சேர்த்து வாணலை மூடி வேகவைக்கவும்.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு சிக்கன் வறுவல் தயார்.