அரசியலில் இருந்து தன்னை வெளியேற்றுவது கடினம்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்….
அரசியலில் இருந்து தன்னை வெளியேற்றுவது கடினம்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு விழாவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்றி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை என தெரிவித்தார்.
தமிழகம் அளிக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா தான் ஒன்றிய அரசு வழங்குவதாக தெரிவித்த அவர், ஓட்டுக்கு காசு வாங்குவதை நிறுத்தினால் தான் ஏழ்மை ஒழியும் என தெரிவித்தார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இறுதியானவுடன் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.