கால்நடை மருந்தகங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு…!!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் :
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமானது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை ஆணையர் வனிதா தலைமையில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
பௌர்ணமி கிரிவலம் :
திருவண்ணாமலையில் பௌர்ணமி முன்னிட்டு நடைப்பெற்ற கிரிவலத்தை காண பல்வேறு மானிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். இதனால் தமிழகம் முழுவதிலும் இருந்து 520 சிறப்பு பேருந்துகளும் மூன்று சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கிரிவலம் முடிந்து ஊர் திரும்ப போதுமான பேருந்துவசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிய தேர் வெள்ளோட்டம் :
மதுரை அண்ணா நகரில் 200 ஆண்டு பழமை வாய்ந்த சேவுகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொழிலதிபர் ராஜ்குமார் அவர்களின் மனைவி சசிகுமாரி 15 லட்சம் மதிப்புள்ள தேக்குமரத்திலான புதிய தேர் செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலில் இருந்து புறப்பட்ட தேரானது கோவிலை சுற்றி வந்து திருஷ்டிகள் உடைக்கப்பட்டு தேர் நிலை நிறுத்தப்பட்டது.
கால்நடை மருந்தகம் :
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர்.க. தர்ப்பகராஜ். கீழ்முருங்கையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் கால்நடை மருந்தகம் பார்வையிட்டு பின்னர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்குகளை ஆய்வு செய்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..