மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அற்புதம் வாய்ந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்து பார்க்காத நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நபரால் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைத்து பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்த பிள்ளையார் சுழி போடுவிங்க. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எப்போதும் போல அமையும். பெரிய அளவில் ஏற்றமும் இருக்காது. பெரிய அளவில் இறக்கமும் இருக்காது. உங்களுடைய வேலைகளை பொறுப்போடு செய்து கொண்டால் நன்மை நடக்கும். அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அடுத்தவர்கள் நலனுக்காக செய்யும் காரியம் பிறகு உங்களுக்கு பிரச்சினையை கொடுத்து விடும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன வேலை கூட இழுபறியாக இழுத்துக் கொண்டே இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம், ஏதாவது முக்கியமான ஆவணத்தில் கையெழுத்து வாங்க வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால் அதை இன்னைக்கு செய்யாதீங்க. மனைவி சொல் பேச்சு கேட்டு நடந்தால் உங்களுக்கு இன்று நன்மை நடக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் கூடுதலாக முதலீடு செய்து விரிவு படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கிக் கடனுக்கு முயற்சி செய்யலாம். சேல்ஸ்மேன் வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நல்லது நடக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கினாலும், போகப் போக உங்களுடைய வேலையை வேகமாக செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். வருமானம் இன்று அதிகரிக்கும் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பையில் காசு நிற்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை ஒரு வேலையை கூட உருப்படியாக செய்ய விட மாட்டார்கள். உனக்குத்தான் நல்லது நடக்குது என்று ஏத்திவிட்டு பிரச்சினையை கூட்டி விடுவார்கள். ஆகவே மூன்றாவது நபர் சொல்லக்கூடிய பேச்சைக் கேட்டுகிட்டு ஆடாதீங்க. வெற்றியாகவே இருந்தாலும் அமைதியாக இருந்தால் இன்று பிரச்சனை இல்லை. பெரிய ஆடம்பரமும் பகுமானமும் தான் உங்களுக்கு இன்று பிரச்சினையைக் கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். ஆண் பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாய்மாமன் உறவு உங்கள் பிரச்சனைகளுக்கு தோள் கொடுக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். வியாபாரத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டுமோ, அவரவருக்கு அதை கொடுக்க வேண்டும். அடுத்தவர்களை ஏமாற்ற நினைத்தால் நஷ்டம் உங்களுக்குத்தான்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதை குற்றம் குறை சொல்ல நாலு பேர் இருப்பாங்க. அவங்களை பற்றி கவலைப்படாதீர்கள். நம்மை பற்றி நாலு பேர் பேச ஆரம்பித்து விட்டால், நாம் உயர்ந்த நிலையை அடையப் போகின்றோம் என்று அர்த்தம். உங்களை தரை குறைவாக பேசுபவர்களை பற்றி இன்று நீங்கள் கவலைப்பட கூடாது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அடக்கம் தேவை. ரொம்பவும் பேசக்கூடாது. பொது இடங்களில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பஞ்சாயத்துக்கு சென்றால் உங்கள் மூக்கு உடையும். மௌன விரதம் இருந்தால் கூட இன்று தவறு கிடையாது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கணவன் மனைவிக்குள் மட்டும் சின்ன வாக்குவாதம் வரும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வீண் விரைய செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை உயர்த்த வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சரிவர செய்து முடித்து விடுவீர்கள். சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வேலைகளை முடிக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடந்தால் பிரச்சனை இல்லை.