இன்னும் ஆரமிக்கவே இல்ல அதுக்குள்ளே ஹவுஸ்புள் போர்ட் போட்டா எப்படி..?
லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்கள் ஆனா புக் மை ஷோ மற்றும் டிக்கெட் நியூ டாட்.காம் போன்ற இணையதளங்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது..
இருப்பினும் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் மட்டுமே டிக்கெட் புக்கிங் செய்யும் படி விடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் புக்கிங் தவிர நேரடியாக டிக்கெட் விற்பனை கவுண்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளது..
நேரடியாக சென்று வாங்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டனர்.., டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகியுள்ளது..
ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தியேட்டர் ஓனர்கள் திணறி போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்..
ஆனால் ரசிகர்களுக்கு இது ட்ரீட் தரும் விதமாக அமைந்துள்ளது.. ஆன்லைனில் புக்கிங் செய்தும் ஒரு சிலருக்கு புக்கிங் ஆகாத நிலையில் நேரடியாக சென்று டிக்கெட் வாங்கியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஆனால் சில மணி நேரத்திலேயே தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஹவுஸ்புள் போர்டு வைக்கும் அளவிற்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்..