ஆப்பு வைத்த ஆபாச வீடியோ..! பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி..!
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட நிலையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிட்டது.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஹாசன் தொகுதியில் லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்பியாக ஜேடிஎஸ் கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணா களமிறக்கப்பட்டார். ஹாசன் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் 2 நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவ தொடங்கியது. ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில் அந்த பிரச்சனை விஸ்வரூம் எடுத்தது.
இதனால் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றார். பிரஜ்வல் ரேவண்ணா எம்பி பதவியை வைத்து உதவி கேட்ட பெண்களிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதும், ஆசைக்கு இணங்க வைத்தது அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதும் தெரியவந்தது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு விசாரணை குழு விசாரிக்க தொடங்கியது. 34 நாட்கள் கழித்து கடந்த 20ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூர் திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் எஸ்ஐடி கஸ்டடியில் உள்ளார்.
இந்நிலையில் தான் இன்று ஹாசன் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலையில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 5 லட்சத்து 99 ஆயிரத்து 832 ஓட்டுகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜேடிஎஸ் கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணா 5 லட்சத்து 67 ஆயிரத்து 886 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 31 ஆயிரத்து 946 ஆகும். அதாவது பிரஜ்வல் ரேவண்ணாவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் படேல் 31,946 ஓட்டுகள் முன்னிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றிபெற்றது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..