சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்த கருத்தரங்கு கூட்டத்தில் அரசின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக முதல்வர் தெரிவித்தார்.
பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது அதில் கானோளி வாயிலாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அடி அவர் கூறுகையில், ஜவுளி துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும், ஜவுளித்துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 3ம் இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்குவதில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஜவுளி உற்பத்தி செய்வதில் உலக நாடுகளுக்கு தமிழ்நாடு போட்டியாக இருக்க வேண்டும் என்றும் ஜவுளித்துறையில் ஒருங்கிணைந்த கொள்கைகளை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.