தமிழ்நாடு பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சூர்யா சிவா அக்கட்சியில் உள்ள ஆபாசமாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி ஆடியோ வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாஜக வின் அணைத்து பொறுப்புகளிலிருந்து சூர்யா சிவா நீக்கப்பட்டார்.
கட்சி விவகாரங்கள் தொடர்பாக இருவரும் பேசிய நிலையில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. பெண் நிர்வாகியான டெய்ஸி சரணை சூர்யா சிவா ஆபாச வார்த்தைகளில் கடுமையாக பேசி கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வைரலாக நிலையில் இது தொடர்பான விசாரணை முடியும் வரையில் பாஜகவின் எந்த நிகழ்விலும் அவர் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவித்தார் அண்ணாமலை. மேலும் அவரை அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி அறிக்கை வெளியீட்டார்.
இந்நிலையில் நேற்று பாஜக அலுவலகத்திற்கு திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகியோர் ஆஜரானரகள். பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சியின் முக்கிய தலைவர்கள் எங்களிடம் இதை பற்றி பேசினார்கள் பிறகு இந்த பிரச்சனையை இதோடு விட்டுவிடலாம் என்று சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர், இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம் என்றும் இந்த ஆடியோ வை வெளியிட்டவர் யார் என்று தெரிந்த பிறகு அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், நாங்கள் அக்கா தம்பி என்று தான் பேசிக்கொள்வோம் மீண்டும் அதே உறவை தொடருவோம் என்று டெய்சி சரண் கூறினார். இதை தொடர்ந்து சூர்யா பேசுகையில், அக்கா தரப்பில் இருந்து ஆடியோ வெளியாகவில்லை நா செய்த இந்த செயலுக்கு இதற்காக கட்சி எந்த நடவாடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளேன் என்றும் தான் எதற்கு அவ்வாறு பேசினேன் என்பதை கட்சியின் விசாரணை முடிவில் தெரிவிக்கபடும் என்று இருவரும் அந்தர்பல்டி அடித்தனர். அன்று மாற்றி மாற்றி ஆபாசமாக திட்டி கொண்டு இப்போது செய்தியாளர் சந்திப்பில் அக்கா தம்பி என்று வேஷம் போடுகிறார்கள் என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.