இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா புதிய அறிவும் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் பாலின சமத்துவததை முன்னெடுக்கும் வகையில் இந்திய ஆடவர்களுக்கு அளிக்கும் அதே ஊதியம் இனிமேல் இந்தியமகளிர் அணிக்கும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்தான அறிவிப்பில், டெஸ்ட் போட்டியில் 15 லட்சமும், ஓடிஐ யில் 6 லட்சமும், டி20களில் 3 லட்சமும் ஊதியம் நிர்ணயிக்கபட்டுள்ளது. ஆடவர் அணிக்கு நிகரான ஊதியம் மகளிர் அணிக்கும் அளிக்கபடும் என்றும் இது சம பாலின நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் விதமாக இந்த அறிவிப்பு இருக்கும் என்றும், இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க முடிவுகளில் ஒன்று என்றும் அறிவிப்பின் மூலம் ஜெய் ஷா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் இன்னும் வளம் பெற நல்ல வாய்ப்புள்ள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ரசிகர்களின் வரவேற்பை அடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வின் ட்வீட் ட்ரெண்ட் ஆகி வருகிறது