ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று வரும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
அவர் கூறுகையில், ஜம்மு &காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகள் 34% குறைந்துள்ளது, பாதுகாப்புப் படையினரின் இறப்பு 64% மற்றும் பொதுமக்கள் இறப்புகளில் 90% குறைந்துள்ளது
சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், தேசத்துரோகம் மற்றும் இதுபோன்ற பிற குற்றங்களைக் கையாள்வதற்கான கூட்டுத் திட்டத்தைத் திட்டமிட இந்த சிந்தன் ஷிவிர் உதவும் மேலும் 2024ம் ஆண்டிற்குள் அணைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கபடும் என்றும் அவர் கூறினார். குற்றங்களை கையாளுவது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பாகும் என்றும் அவர் அந்த உரையில் கூறினார்.