கணவரை பீர் பாட்டிலால் குத்திய மனைவி.. தீவிர விசாரணையில் போலீஸ்..!
சென்னை வேப்பேரியை சேர்ந்த தம்பதியினர் விமல் – லதா. இவர்கள் வேப்பேரி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள சாலை ஓரம் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் லதா நேற்று மாலை வேறொரு ஆண் ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விமல் லாதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் லதா அருகில் இருந்த பீர் பாட்டிலால் கணவர் விமலை பலமாக குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சரிந்து விழுந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த வேப்பேரி போலீசார் லதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”