அறிவியல் சாராத சிந்தனைகள்..!! தவெக தீர்மானம்..!!
சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று.. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
பகுத்தறிவு மற்றும் தீண்டாமை :
மனித குல அழிவிற்கு வழிவகுக்கின்ற, உடல், மன, குண நலனுக்குக் கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும். தீண்டாமை என்பது குற்றம்.
தீண்டாமையைக் கடைப்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. என தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..