சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து 133 பயணிகளுடன் வுஜோ நகருக்கு நேற்று (மார்ச்.21) புறப்பட்டது.
அப்போது, விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது.
இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அந்த விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போதுவரை விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால் இந்த விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.