நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும். ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பதா? என புகார் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.